ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலிருந்து அந்நாட்டின் தென்மேற்கு நகரமான முர்மான்ஸுக்கு 73 பயணிகளுடன் விமான புறப்பட்டுச் சென்றது. புறப்பட்டு சில நிமிடங்களிலேயே விமானத்தில் கோளாறு ஏற்பட்டதை உணர்ந்த விமானி, மாஸ்கோ சர்வதேச விமானத்தில் அவசரமாக தரையிறக்க கட்டுப்பாட்டு அறையிடம் அனுமதி கோரினார்.
இதனையடுத்து, சுமார் 27 நிமிடங்கள் கழித்து விமான தரையிறங்கிய போதே, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், 37 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதில் படுகாயமடைந்த ஐந்து பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக பேசியுள்ள அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின், விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.