சீனாவின் ஷன்ஜி மாகாணம் லின்ஃபென் நகரில் இரண்டு மாடி கொண்ட உணவக விடுதி திடிரென நேற்று இரவு இடிந்து விழுந்தது. அச்சமயத்தில் உணவகத்தில் இருந்த 50க்கும் மேற்பட்டோர் கட்டட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினரும், காவல் துறையினரும் மக்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
கிடைத்த தகவலின்படி, கட்டட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர். பலத்த காயமடைந்த 28 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மீட்பு நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் கட்டட சரிவு குறித்து தெளிவான விவரங்கள் வெளிவரவில்லை.