சீனாவின் வூஹான் நகரில் தொற்றிய கொவிட்-19 வைரஸ் (கொரோனா வைரஸ்) அந்நாடு முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வைரஸைக் கட்டுப்பட்டுத்த அந்நாட்டு அரசு தீவிரமாக முயற்சி செய்து வரும் சூழலில், நாளுக்கு நாள் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த நோயால் புதிதாக 406 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 52 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.
இதன் மூலம், சீனாவில் கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 78 ஆயிரத்து 64ஆகவும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டு ஆயிரத்து 715ஆகவும் உயர்ந்துள்ளது.
சீனா தவிர தென் கொரியா, ஈரான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலும் கொவிட்-19 வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இது உலக நாடுகள் இடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : டாம் குரூஸின் 'மிஷன்: இம்பாசிபிள் 7' பாதித்த கொரோனா