'தி வால் ஸ்ட்ரீட் ஜெர்னல்' செய்தித்தாளின் தெற்கு ஆசிய பணியகத் தலைவராக ( Bureau chief) பணியாற்றி வந்த டேனியல் பெர்ல் (அமெரிக்கர்), இரட்டை கோபுரம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் நாட்டின் உளவுத் துறையான ஐஎஸ்ஐ-க்கும், அல்-குவைதா பயங்கரவாத அமைப்புக்கு இடையே உள்ள தொடர்பை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில், 2002ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23ஆம் தேதி டேனியலை ஒரு கும்பல் கடத்தி கொலை செய்தது.
உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, இந்தக் கொலை தொடர்பான வழக்கில் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த அல் குவைதா பயங்கரவாதி உமர் சயீத் ஷேக்கை குற்றவாளி என தீர்ப்பளித்து, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும், உமருக்குத் துணை போன பஹத் நசீம், சல்மான் சகிப், ஷேக் அதில் ஆகியோருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்குத் தொடர்பாக பாகிஸ்தானின் சிந்த் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த மேல்முறையீட்டு வழக்கில், குற்றவாளிகள் அனைவரும் நிரபராதிகள் என்று நேற்று (ஏப். 2) நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.
இதைத் தொடர்ந்து, டேனியல் பெர்லின் பெற்றோர் ரூத் பெர்ல்-ஜூடி பெர்ல் ஆகியோர் சார்பாக, மூத்த வழக்கறிஞர் பைசல் சித்திக் சிந்த் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதையும் படிங்க : சீனாவை பாராட்டிய உலக சுகாதார அமைப்பு