ETV Bharat / international

சீனாவை கரோனா படுத்தும்பாடு!

பெய்ஜிங்: கோவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக நேற்று சீனாவில் 13 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் சீனாவில் இந்த வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,226 ஆக அதிகரித்துள்ளது.

COVID-19 in China
COVID-19 in China
author img

By

Published : Mar 17, 2020, 4:30 PM IST

கடந்தாண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கோவிட் 19 வைரஸ் தொற்று சீனாவையே உலுக்கியது. வைரஸ் பரவலைத் தடுக்க, அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. குறிப்பாக, இந்த வைரஸ் தொற்றால் வூஹான் நகரமே சில வாரங்கள் முடக்கப்பட்டன.

இந்நிலையில், கோவிட் 19 வைரஸ் தொற்று குறித்து சீனா சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "திங்கள்கிழமை (மார்ச் 16) மட்டும் புதிதாக 21 பேருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 45 பேர் கோவிட் 19 அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுமட்டுமின்றி, இந்த வைரஸ் தொற்றின் காரணமாக நேற்று மட்டும் 13 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 12 பேர் ஹூபே மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். மேலும், சிகிச்சை பெற்றுவந்த 930 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 2,830இல் இருந்து 202ஆக குறைந்துள்ளது.

இதுவரை 80,881 பேருக்கு கோவிட் 19 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 68,679 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்துள்ளனர். 8,976 பேர் மருத்துவமணையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 3,226 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், இந்த வைரஸ் தொற்று இருந்த நபருடன் தொடர்பிலிருந்த 128 பேர் இன்னும் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 1,105 பேர் மருத்துவக் கண்காணிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் 19 வைரஸ் தொற்றின் தாக்கம் சீனாவில் குறைந்துவரும்போதும் இத்தாலி, ஈரான் போன்ற நாடுகளில், இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் தற்போதுதான் நாளுக்கு நாள் மோசமாகிவருகிறது.

இதையும் படிங்க: அமெரிக்காவில் கரோனா வைரஸ் தடுப்பூசி சோதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.