கரோனா வைரஸில், SARS-CoV-2 இன் மரபணு அம்சங்கள் இருப்பதாக பல ஆராய்ச்சியாளர்களும் தெரிவித்துள்ளனர். மேலும் SARS-CoV-2 ஆய்வகத்தில் கட்டமைக்கப்பட்டது அல்ல அதற்கான சான்றுகளும் இல்லை என தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, ஒருவேளை கட்டமைக்கப்பட்ட வைரஸாக இருந்தால் மரபணு வரிசையானது நாம் ஏற்கனவே அறிந்த கூறுகளின் கலவையைக் காண்பித்திருக்கும், ஆனால் இதில் அப்படி எதுவும் தென்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
ஜனவரி மாத தொடக்கத்தில் அடையாளம் காணப்பட்ட கரோனா வைரஸின் மரபணு வரிசை, ஜனவரி 11, 12 ஆகிய தினங்களில் உலக நாடுகளிடையே வெளிப்படையாக பகிரப்பட்டதையும் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
மேலும் சீனா தொடங்கி இதுவரை பரவிய அனைத்து நாடுகளிலுமுள்ள வைரஸின் மரபணு கட்டமைப்பை ஆராய்ச்சிக்கு உட்படுத்தியதில் இருந்து வௌவால்கள்தான் கரோனாவின் ஆரம்பப்புள்ளி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, வௌவால்களுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான வைரஸ் பரவியதற்கு காரணமான விலங்கு இன்னும் கண்டறியப்படவில்லை, கரோனா விலங்கிலிருந்தே மனிதனுக்கு பரவியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவிலிருந்து தொடங்கி கரோனா தொற்று பரவியதற்கான காரணம் குறித்த பல விசாரணைகள் நடந்து வருவதாகவும், மேற்கொண்டு திட்டங்கள் உள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இன்று காலை வரை உலகளவில் மொத்தமுள்ள கரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 27லட்சத்து 8 ஆயிரத்து 470, இறந்தவர்களின் எண்ணிக்கை லட்சத்து 90 ஆயிரத்து 788 ஆகும்.
இதையும் படிங்க: போலி மின்னஞ்சல்கள் உஷார் - மக்களை எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு