சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கொவிட்-19 ( கொரோனா) வைரஸ் தொற்று, தற்போது உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. இந்நோய் காரணமாக, சீனாவில் மட்டும் நான்கு ஆயிர்தது 515 பேர் உயிரிழந்துள்ளனர். உலக சுகாதார அமைப்பால் "பெருந்தொற்று" என அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் காரணமாக, சீனப் பெருளாதாரம் பெரியளவில் சரிவைச் சந்தித்துள்ளது.
வைரஸை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு தீவிரமாக முயற்சித்து வரும் வேளையில், தன் நாட்டு எல்லைக்குட்பட்ட உலகின் மிகப் பெரிய சிகரமான எவரெஸ்டில் ஏறுவதற்கு சீனா அரசு தடைவிதித்துள்ளதாக, திபெத் மலையேறுதல் சங்கம் (Tibetan Mountaineering Association) அறிவித்ததுள்ளது.
சிகரம் ஏறுபவர்கள், அவர்களை ஒருங்கிணைக்கும் நிறுவனங்களின் பாதுகாப்புக்கருதி, இந்த முடிவை எடுத்துள்ளதாக, அச்சங்கத்தின் துணை இயக்குநர் பீமா தின்லே ஜிங்ஹூவாவுக்கு (சீனா அரசு ஊடகம்) பேட்டி அளித்துள்ளார்.
இதையும் படிங்க : அதிர்ச்சி: கொரோனா வைரஸால் இந்தியாவில் முதல் உயிரிழப்பு!