சீனாவில் பரவிவரும் கரோனா வைரஸால் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 106ஆக உயர்ந்துள்ளது. வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 4000ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் வைரஸ் தொற்று மேலும் பரவாமலிருக்க புத்தாண்டு விடுமுறையை சீனா அரசு நீட்டித்துள்ளது.
சீனாவில் வாழும் பிற நாட்டு மக்கள் வைரஸால் பாதிக்கப்படாமல் இருக்க, அந்தந்த நாடுகள் தம் மக்களை வூஹானிலிருந்து வெளியேற்ற திட்டமிட்டுள்ளன. இதில் பிரான்ஸ், ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளும் உள்ளடங்கும். இலங்கை, தாய்லாந்து போன்ற நாடுகள் தம் மக்களை வெளியேற்ற திட்டமிட்டுவருகின்றனர்.
வைரஸின் மையமாக இருக்கும் மத்திய ஹுபே மாகாணத்தின் சுகாதார ஆணையமானது, தற்போது 24 பேர் வைரஸால் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 1300 பேரை வைரஸ் தாக்கியுள்ளதாகவும் தற்போது வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4000ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கரோனா வைரஸ்: சீனாவில் இருக்கும் இந்தியர்களைக் கண்டறிவதில் சிக்கல்!