சீனாவின் வூஹான் நகரத்தில் தோன்றி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. நூற்றுக்கணக்கானவர்கள், நாள் தோறும் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சீனாவில் இருந்து தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.
அந்நாட்டின் விமானப்போக்குவரத்தை பல்வேறு நாடுகள் தற்காலிகமாக தடை விதித்துள்ளன. அந்நாட்டின், பொருளாதாரம் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில், வூஹான் பகுதியைக் கொண்டுள்ள ஹூபே மாகாணத்தில் மட்டும் கொரோனா பலி எண்ணிக்கை தற்போது 2 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. வூஹான் அரசு மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, சீனாவில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை சுமார் 75 ஆயிரத்தைத் தொட்டுள்ளது. ஈரான் நாட்டில், கொரோனா பதிப்பால் இருவர் உயிரிழந்துள்ளது இன்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் கொரோனாவின் பாதிப்பு மத்திய கிழக்கு நாடுகளிலும் தலைகாட்டத் தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: சைவ மடத்திற்கு தலைமையேற்கும் இஸ்லாமியர் - அசத்தும் கர்நாடகா