கொரோனா வைரஸ் பாதிப்பு சீனாவின் அண்டை நாடான தென்கொரியாவில் தற்போது கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டில் நோய் பாதிப்பால் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தைத் தொட்டுள்ளது.
இதையடுத்து, அந்நாட்டில் கொரோனா எமர்ஜென்சி நிலையை ஆரஞ்சில் இருந்து ரெட்டுக்கு மாற்றி அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. தென்கொரியா நாட்டிற்குப் பயணம் செல்லவும் அங்கிருந்து பயணிகள் வருவதையும் தற்காலிகமாக நிறுத்திவைத்து இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.
சீனாவில் தொடங்கிய கொரோனாவின் தாக்கம் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்துவருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பாவிலும் இந்நோய் பரவத் தொடங்கியுள்ளது. குறிப்பாக ஈரான் நாட்டில் நோயின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்நாட்டின் துணை அதிபர், சுகாதாரத் துறை அமைச்சர்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தீவரமாகப் பரவிவரும் கொரோனா வைரஸை சர்வதேச அவசர நிலையாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: மத்திய அரசுக்கு அறிவுரை சொன்ன ரகுராம் ராஜன்!