ETV Bharat / international

ஆப்கானிஸ்தான் அமைதி பேச்சுவார்த்தை - இறுதி ஒப்பந்தம் எட்டப்படுமா? - ஆப்கானிஸ்தான் அமைதி பேச்சுவார்த்தை

தோஹா: ஆப்கானிஸ்தான் அரசு, தலிபான் அமைப்புக்கிடையேயான அமைதி பேச்சுவார்த்தை கத்தார் நாட்டில் நடைபெற்றுவரும் நிலையில், இறுதி ஒப்பந்தம் எட்டப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அமைதி பேச்சுவார்த்தை
ஆப்கானிஸ்தான் அமைதி பேச்சுவார்த்தை
author img

By

Published : Oct 20, 2020, 2:09 PM IST

பல ஆண்டுகாலமாக, அமெரிக்க ஆதரவு ஆப்கானிஸ்தான் அரசுக்கிடையேயும் தலிபான் அமைப்புக்கிடையேயும் போர் நிகழ்ந்துவந்தது. இதற்கிடையே, ஐஎஸ் அமைப்பின் வளர்ச்சியை தடுக்கும் விதமாக தலிபான், அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் போடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் அமைதி பேச்சுவார்த்தை கத்தாரில் தொடங்கியது.

தலிபான் பிரதிநிதிகளும் ஆப்கானிஸ்தான் அரசின் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டு பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். கருத்து வேறுபாடு நிலவும் விவகாரங்கள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டுவருவதாக ஆப்கானிஸ்தான் அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் சார்பில் ஏழு பிரதிநிதிகளும் தலிபான் சார்பில் ஐந்து பிரிதிநிதிகளும் இதில் கலந்துகொண்ட நிலையில், தற்போது பிரிதிநிதிகளின் எண்ணிக்கை மூன்றாக குறைக்கப்பட்டுள்ளது. அமைதி பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய விவகாரங்கள் குறித்து தொடர்ந்து ஆலோசிக்கப்படுவதாக தலிபான் செய்தித் தொடர்பாளர் முகமது நஹிம் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் அரசு, தலிபான் அமைப்புக்கிடையே 20 இல் 18 விவகாரங்களில் ஒத்த கருத்து எட்டப்பட்டுள்ளது. மதம் சார்ந்த விவகாரத்திலும், அமெரிக்க - தலிபான் பேச்சுவார்த்தை தொடர்பாகவும் இருவருக்கிடையே தொடர் மாற்று கருத்து நிலவிவருகிறது. முன்னதாக, ஆப்கானிஸ்தான் அமைதி பேச்சுவார்த்தை செப்டம்பர் 12ஆம் தேதி தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நடிகைகளுக்கு பிணை வழங்காவிட்டால் குண்டு வெடிக்கும்... கடிதத்தால் அதிர்ந்த பெங்களூரு நீதிபதி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.