ETV Bharat / international

ராஜ்நாத்தை சந்திக்க முயற்சிக்கும் சீன பாதுகாப்புத் துறை அமைச்சர்!

author img

By

Published : Sep 4, 2020, 1:42 PM IST

மாஸ்கோ: இருநாடுகளுக்கிடையே பதற்றம் நிலவிவரும் நிலையில், அமைதியை நிலைநாட்டும் வகையில் ராஜ்நாத்தை சந்திக்க சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் முயற்சி மேற்கொண்டுவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சீன பாதுக்காப்புதுறை அமைச்சர்
சீன பாதுக்காப்புதுறை அமைச்சர்

இந்திய, சீன எல்லைப் பகுதியான கிழக்கு லடாக்கில் இருநாடுகளுக்கிடையே பதற்றம் நிலவிவரும் நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் கலந்துகொண்டுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்திக்க சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் முயற்சி மேற்கொண்டுவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவில் நடைபெற்றுவரும் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள ராஜ்நாத் சிங் மூன்று நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். ராஜ்நாத் சிங்கின் நிகழ்ச்சி நிரலில் சீன பாதுகாப்புத் துறை அமைச்சருடனான சந்திப்புக் கூட்டம் இடம்பெறவில்லை. கல்வான் மோதலைத் தொடர்ந்து, இந்திய, சீன நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவிவரும் நிலையில், எல்லைப் பகுதியில் அமைதியை நிலைநாட்டும் வகையில் ராணுவம் திரும்பப்பெறும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என இந்தியா சீனாவை வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், "ராஜாங்க, ராணுவ ரீதியாகப் பேச்சுவார்த்தை மேற்கொள்வதே ஒரே வழி" என்றார்.

லடாக்கில் உள்ள பாங்காங் சோ ஏரியின் தென்கரையை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் எடுத்த சீனா, இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி மேற்கொண்டது. ஆனால், இந்த முயற்சியை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது.

இதையும் படிங்க: இந்தியாவில் 39 லட்சத்தைக் கடந்த கரோனா பாதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.