ETV Bharat / international

கரோனா முடிவதற்குள் சீனாவில் பரவும் அடுத்த கொடூரத் தொற்று! - புபோனிக் பிளேக்

பெய்ஜிங்: சீனா ஆளுகைக்குட்பட்ட மங்கோலியா பகுதியில் இருவருக்கு புபோனிக் பிளேக் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அப்பகுதியில் மூன்றாம் நிலை எச்சரிக்கை நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.

China takes precautions for bubonic plague

author img

By

Published : Jul 6, 2020, 6:00 PM IST

சீனாவின் வூஹான் நகரில் கடந்தாண்டு இறுதியில் கோவிட்-19 முதன்முதலில் கண்டறியப்பட்டது. தற்போது, சீனாவில் இந்த வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டாலும், உலகிலுள்ள மற்ற நாடுகள் இத்தொற்று காரணமாக மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சீனாவின் ஆளுகைக்குட்பட்ட தன்னாட்சிபெற்ற பகுதியான மங்கோலியாவில் சனிக்கிழமை ஒருவருக்கு புபோனிக் பிளேக் தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவருக்கு எப்படி பிளேக் தொற்று பரவியது என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.

அதைத் தொடர்ந்து, அப்பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுவனுக்கும் இந்தத் தொற்று உறுதிசெய்யப்பட்டது. அப்பகுதியில் நாயால் வேட்டையாடப்பட்ட மர்மோட் என்ற விலங்குடன் அச்சிறுவன் தொடர்பு கொண்டிருக்கலாம் என்றும், இதன்மூலம் இந்தக் கொடூரத் தொற்று அச்சிறுவனுக்குப் பரவியிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மங்கோலியா பகுதியில் இருவருக்கு புபோனிக் பிளேக் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அப்பகுதியில் இந்தாண்டு இறுதிவரை மூன்றாம் நிலை எச்சரிக்கை நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதவாது இந்த புபோனிக் பிளேக் தொற்றைக் கடத்தும் விலங்குகளை பொதுமக்கள் வேட்டையாடவும் உண்ணவும் இந்தாண்டு இறுதிவரை தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மனிதகுல வரலாற்றிலேயே மிகப் பெரிய அழிவை ஏற்படுத்தியது இந்த புபோனிக் பிளேக் தொற்றுதான் என்பதால் பொதுமக்களிடையே இந்தச் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 14ஆம் நூற்றாண்டில் ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பிய நாடுகளில் இந்தத் தொற்று பரவியதில் ஐந்து கோடி பேர் உயிரிழந்தனர்.

அதேபோல, 1665ஆம் ஆண்டு லண்டனில் ஏற்பட்ட இந்தத் தொற்று காரணமாக ஐந்தில் ஒருவர் உயிரிழந்தார். அதேபோல, 19ஆம் நூற்றாண்டில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் இத்தொற்று மீண்டும் பரவியது. இதில் 1.20 கோடி பேர் உயிரிழந்தனர்.

இந்தக் கொடிய தொற்று காரணமாக பாதிக்கப்படுபவர்களில் 30 முதல் 60 விழுக்காட்டினர் உயிரிழக்கக் கூடும் என்பதால், இந்த வைரஸ் பரவுவதற்கு முன்னரே கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். இல்லையென்றால் பேரழிவு ஏற்படுவது நிச்சயம் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது உலகை ஆட்டிப்படைக்கும் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 3-6 விழுக்காட்டினரே உயிரிழக்கிறார்கள். இதை வைத்து புபோனிக் பிளேக் தொற்றின் வீரியத்தை நாம் புரிந்துகொள்ளலாம்.

இதையும படிங்க: அமெரிக்காவில் நாய்க்கு கரோனா உறுதி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.