சீனாவின் தன்னாட்சிப் பிராந்தியங்களுள் ஒன்றான திபத்தின் லிஹாரி மாவட்டத்தில் 1989ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி பிறந்தவர் கெதுன் சோக்கீ நைமா.
திபத்திய ஆன்மீக அரசியல் தலைவரான தலாய் லாமா, இவரை 11-வது பஞ்சன் லாமாக 1995ஆம் ஆண்டு (6 வயது) தேர்ந்தெடுத்தார். ஆனால், கெதுனை பஞ்சன் லாமாவாக ஏற்க மறுத்த சீன அரசு, அவருக்குப் பதிலாக கியால்ட்சென் நோர்பூ என்பவரை பஞ்சன் லாமாவாக அறிவித்தது.
இதனிடையே, பஞ்சன் லாமாகவாக அறிவிக்கப்பட்ட சில நாட்களில் கெதுன் சோக்கீ மாயமானார். தற்போதுவரை அவரும், அவரது குடும்பத்தினரும் எங்கிருக்கிறார்கள் என்பது வெளியுலகம் அறியாத உண்மை.
இந்நிலையில், கெதுன் மாயமாகி 25 ஆண்டுகள் கழிந்ததைச் சமீபத்தில் அனுசரித்த அங்கீகரிக்கப்படாத (self-decared government-in-exile) திபத் நாட்டு அரசு, அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்த தகவலைத் தெரிவிக்குமாறு சீனா அரசிடம் வலியுறுத்தியிருந்தது.
இதற்குப் பதிலளித்த சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஜோயி லிஜியங், "கெதுன் சோக்கீ நைமா சீன அரசின் கட்டாயக் கல்வித் திட்டத்தின் கீழ் கல்வி பெற்று, கல்லூரி நுழைவுத் தேர்விலும் தேர்ச்சிபெற்று, நல்ல வேலையிலும் உள்ளார். அவரும் அவரது குடும்பத்தினரும் தங்களது இயல்பான வாழ்க்கையை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை" என்றார்.
பொதுவாக பஞ்சன் லாமாக்கள் ஒரு ஆசிரியராகவும், தலாய் லாமாகவுக்கு துணையாகவும் பணிபுரிவர் என்பது குறிப்பிடத்கக்து.
இதையும் படிங்க : அலுவலகத்தை அவசியமின்றி பூட்டவேண்டாம்: கரோனா வழிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு