சீனாவின் ஜிங்ஜியாங் மாகாணத்தில் உயர்கர் இஸ்லாமியர்கள் கணிசமாக வாழ்கின்றனர். அந்நாட்டின் சிறுபான்மை மக்களான அவர்கள் மீது அந்நாடு கடும் ஒடுக்குமுறையை கட்டவழித்துவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துவருகிறது. குறிப்பாக அவர்களது கலாசார, பண்பாட்டு அடையாளங்களை அழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு அரசு தீவிரமாக செயல்பட்டுவருவதாகக் கூறப்படுகிறது.
சீன அரசின் இந்த அடுக்குமுறை குறித்த முக்கிய ஆய்வறிக்கையை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2017ஆம் ஆண்டிலிருந்து சுமார் 380க்கும் மேற்பட்ட சிறை முகாம்களை ஜிங்ஜியாங் மாகாணத்தில் அந்நாட்டு அரசு அமைத்துள்ளது. அங்கு மனித உரிமை மீறல் நடவடிக்கையை மேற்கொள்ளும் விதமாக கட்டாய கல்வி, பயிற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது.
மேலும், உய்கர் மக்களின் தனித்துவத்தை நீர்த்துப்போகச் செய்யும்விதமாக சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அதன்படி, லட்சக்கணக்கான உய்கர் இன மக்களை தடுப்பு முகாம்களில் அடைத்து கம்யூனிச சித்தாந்தங்களை வற்புறுத்தி கற்பித்து, அவர்களது கலாசாரத்தை அழித்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இதையும் படிங்க: சீனாவின் ஒற்றை அதிகார மையமாக மாறுகிறாரா ஜி ஜின்பிங்?