ETV Bharat / international

சீனாவில் மீண்டும் தலைதூக்கும் கரோனா! - Mongolia Autonomous Region

பெய்ஜிங்: கோவிட்-19 தொற்றால் ஒரேநாளில் 36 பேர் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சீன நாட்டு சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது.

China reports 36 new coronavirus cases
சீனாவில் மீண்டும் தலைதூக்கும் கரோனா!
author img

By

Published : May 26, 2020, 2:45 PM IST

உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக சீனாவில் இதுவரை 82 ஆயிரத்து 992 பேர் பாதிக்கப்பட்டும், நான்காயிரத்து 634 பேர் உயிரிழந்தும் உள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

கரோனா பரவலைத் தடுக்க சீன அரசு மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கோவிட்-19 பரவல் தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தின் இறுதியிலிருந்து அங்கு கோவிட்-19 இறப்புகள் குறைந்த வந்ததையடுத்து வூகான் தலைநகரத்திற்கு விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவினை மார்ச் 30ஆம் தேதி சீன அரசு தளர்த்தியது.

இருப்பினும், கோவிட்-19 பாதிப்பு அறிகுறிகள் இல்லாமல் கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவுவது சீனாவுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக வூகான் நகரம் அமைந்துள்ள ஹூபே மாகாணம் முழுவதும் இதுவரை 65 லட்சம் மக்களிடம் கரோனா பரிசோதனையை சீன சுகாதாரத் துறை மேற்கொண்டுள்ளது.

இந்தச் சூழலில், கடந்த சில நாள்களாக அறிகுறிகள் இல்லாமல் கரோனா நோய்த்தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுவருகிறது.

இந்நிலையில், நேற்று ஒரேநாளில் 36 பேருக்கு கரோனா தீநுண்மி தொற்று உறுதிசெய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் அறிகுறிகள் எதுவும் இல்லாதவர்கள் என்று சீன சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சீன சுகாதார அலுவலர்கள் கூறுகையில், “சீனாவில் புதிதாக 36 பேருக்கு கரோனா தீநுண்மி பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, 29 பேருக்கு அறிகுறியற்ற நிலையில் தொற்று இருந்தது கவனிக்கத்தக்கது.

தொற்றுநோயின் முதல் பாதிப்பு மையமான வூகானில் மே 14 முதல் 23 வரை 65 லட்சம் மக்களுக்கு பாதிப்பைக் கண்டறிய நியூக்ளிக் அமில சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் புதிதாக பாதிக்கப்பட்டிருக்கும் ஏழு பேர் வெளிநாட்டிலிருந்து சீனா திரும்பியவர்கள். இதில், மங்கோலியா தன்னாட்சி பிராந்தியத்தில் ஐந்து பேருக்கும், ஷாங்காய், புஜியன் ஆகிய இரு மாகாணங்களில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.

கோவிட்-19 பாதிப்பு காரணமாக நேற்று எந்த இறப்பும் பதிவாகவில்லை. வெளிநாடுகளிலிருந்து திரும்பிய 28 பேர் உள்பட 403 அறிகுறியற்ற நோயாளிகள் தற்போது நாடு முழுவதும் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தனர்.

உலகளவில் கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டிருக்கும் நாடுகளின் தற்போதைய வரிசையில் 14ஆம் இடத்தில் சீனா இருப்பது கவனிக்கத்தக்கது.

இதையும் படிங்க : மாநிலங்களின் அவசரகால நிலையை விரைவில் நீக்குகிறது ஜப்பான்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.