சீனாவின் வூஹான் நகரில் கடந்தாண்டு இறுதியில் கோவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டது. சீனா எடுத்த நடவடிக்கைகள் காரணமாக அந்நாட்டில் கரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதனால் அங்கு மெள்ள மெள்ள இயல்பு வாழ்க்கை திரும்பிவருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாள்களாக வூஹான், ஜிலின் உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் கரோனா பரவல் கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சீனாவில் வியாழக்கிழமை 33 பேருக்கு புதிதாக கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் ஷாங்காய் நகரைச் சேர்ந்தவர். மற்றொருவர் குவாங்டாங் பகுதியைச் சேர்ந்தவர்
மேலும், கரோனா உறுதிசெய்யப்பட்ட 31 பேர் எந்தவொரு கரோனா அறிகுறிகளை வெளிப்படுத்தாமல் இருந்தனர். அதிகபட்சமாக வூஹான் நகரில் 28 asymptomatic case-கள் கண்டறியப்பட்டுள்ளன.
இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள asymptomatic case-களின் எண்ணிக்கை 375ஆக அதிகரித்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வூஹான் நகரில் மட்டும் தற்போதுவரை 281 asymptomatic case கண்டறியப்பட்டுள்ளதாகவும் மேலும் 861 பேர் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தாண்டு ஜனவரி முதல் மார்ச் வரையில் மட்டும் வூஹான் நகரில் 50 ஆயிரத்து 340 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவர்களில் மூன்றாயிரத்து 869 பேர் உயிரிழந்தனர். இதனால் அப்பகுதியில் மீண்டும் கரோனா பரவல் ஏற்படுமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.
இதைக் கருத்தில்கொண்டு வூஹான் நகரிலுள்ள அனைத்து மக்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்றுவருவதாக அந்நாட்டின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
சீனாவில் இதுவரை 82 ஆயிரத்து 967 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது, அவர்களில் நான்காயிரத்து 634 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதவிர 84 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இதையும் படிங்க: மருத்துவத் துறையில் முக்கிய தேவைகளில் ஒன்று 'செயற்கை நுண்ணறிவு'...!