சீனாவின் சேஞ்ச்-5 விண்கலம் கடந்த நவம்பர் 24ஆம் தேதி 4.30 மணியளவில் ஹைனானில் உள்ள வென்சாங் விண்கலம் மையத்திலிருந்து ஏவப்பட்டது. சேஞ்ச்-5 விண்கலம், நிலவிலிருந்து கற்களை பூமிக்கு கொண்டுவரும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளது. சுமார், இரண்டு நாள்களுக்கு நிலவின் மேற்பரப்பில் துளையிட்டு இரண்டு கிலோ எடை கொண்ட பெரிய கற்களை எடுத்து வரவுள்ளது.
இந்நிலையில், இந்த விண்கலம் வெற்றிகரமாக நிலவின் மாதிரிகளை சேகரித்துவிட்டது என்னும் அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில், சேஞ்ச்-5 விண்கலம் பூமிக்குத் திரும்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க மற்றும் ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் சீனாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்தக் கற்களின் மாதிரிகள் கிடைப்பதன் மூலம், நிலவின் தற்போதைய நிலையை அறிய முடியும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.