சீனாவின் வூஹான் மாகாணத்தில் தோன்றிய கரோனா வைரஸ் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. கரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 900யையும் தாண்டியுள்ளது. மேலும் 37 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் சீன அரசு "close contact detector" எனும் புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. செயலியின் பயனாளிகள் தங்களுடன் இருக்கும் கரோனா பாதிக்கப்பட்டவரை சுகாதார அலுவலர்கள் உதவியுடன் தங்களுக்கு தொற்று வராமல் பார்த்துக் கொள்ள இந்த செயலியில் அறிவுறுத்தப்படுகிறது.
இந்த செயலி மாநில கவுன்சிலின் பொது அலுவலகம், தேசிய சுகாதார ஆணையம், சீனா எலெக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்ப குழு நிறுவனங்கள் (சிஇடிசி) ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ளது. இதில் பயனாளர்கள் தங்களது மொபல் நம்பர்களை வைத்தும் பதிவு செய்துக் கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க...'மகளைத் தொட விடாமல் தடுத்த கரோனா' - சீனாவில் பாசப் போராட்டம்