ETV Bharat / international

கோவிட் -19 தடுப்பூசிக்கு காப்புரிமை வழங்கிய சீனா - கான்சினோ பயோலாஜிக்ஸ் இங்க்

பெய்ஜிங்: மருந்து தயாரிப்பு நிறுவனமான கான்சினோ பயோலாஜிக்ஸ் இங்க். சார்பாக கண்டுபிடிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசிக்கு சீனா முதல் கண்டுபிடிப்பு காப்புரிமையை வழங்கியுள்ளது.

china-grants-1st-patent-to-indigenously-developed-covid-19-china-grants-1st-patent-to-indigenously-developed-covid-19-vaccinevaccine
china-grants-1st-patent-to-indigenously-developed-covid-19-vaccine
author img

By

Published : Aug 18, 2020, 4:03 PM IST

கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதற்கு மருந்து கண்டுபிடிக்க பல மருந்து நிறுவனங்களும், ஆராய்ச்சியாளர்களும் ஆய்வில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் சீனாவில் செயல்பட்டுவரும் மருந்து தயாரிப்பு நிறுவனமான கான்சினோ பயோலாஜிக்ஸ் இங்க். சார்பாக கண்டுபிடிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசிக்கு முதல் கண்டுபிடிப்பு காப்புரிமை அந்நாட்டு அரசு சார்பாக வழங்கப்பட்டுள்ளது.

தேசிய அறிவுசார் சொத்து நிர்வாகத்துடன் இணைந்து கோவிட்-19 காப்புரிமைக்காக கான்சினோ நிறுவனம் மார்ச் 18ஆம் தேதி விண்ணப்பித்திருந்தது. அன்றிலிருந்து மூன்று நாள்களுக்கு பிறகு அந்நிறுவனத்தின் முதல் கட்ட மருத்துவப் பரிசோதனைகள் நோயாளிகள் மீது செய்யப்பட்டன. இதன் முடிவுகள் ஆகஸ்ட் 11ஆம் தேதி வந்துள்ளன. இதன் பின்னர் கான்சினோ நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிக்கு காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.

இதைப்பற்றி அந்நாட்டு பிரபல பத்திரிகையான குளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கான்சினோ நிறுவனம் சார்பாக கண்டுபிடிக்கப்பட்டு மறுசீரமைப்பு அடினோவைரஸ் தடுப்பூசி எனவும், ad5-CoV எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் இந்தத் தடுப்பூசியை சீன ராணுவ தொற்றுநோய் வல்லுநர் சென் வீ தலைமையிலான குழுவுடன் இணைந்து கான்சினோ நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது எனக் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே மே மாதத்திலிருந்து கரோனா வைரஸ் தடுப்பூசி பற்றி மேற்கொண்ட ஆய்வு முடிவுகளை சீன ஹேக்கர்கள் திருட முயன்றதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டிவருகிறது.

இந்தத் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட மருத்துவப் பரிசோதனைகள் வெளிநாடுகளில் எவ்வித இடர்ப்பாடுகளும் இல்லாமல் வேகமாக நடந்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கான்சினோ நிறுவனம் சார்பாக பெரிய அளவில் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ள மெக்சிகோவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரஷ்யாவின் பிரபல மருத்துவர் சுகாதார அமைச்சகக் குழுவிலிருந்து விலகல் - கரோனா தடுப்பூசி வெளியீடு எதிரொலியா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.