ETV Bharat / international

கொரோனா ஏப்ரலுக்குள் கட்டுக்குள் வரும் என எதிர்பார்ப்பு

author img

By

Published : Feb 27, 2020, 6:26 PM IST

நாளுக்கு நாள் சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 744 ஆக உள்ளது. வரும் ஏப்ரல் மாதத்திற்குள் வைரஸ் பரவுவது கட்டுப்பாட்டுக்குள் வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

coronavirus death toll increase in China

சீனாவில் கொரோனா வைரஸுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 744 ஆக உயர்ந்துள்ளது. மேலும் வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78 ஆயிரத்து 497 ஆகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து சீன சுகாதார நிபுணர் ஒருவர் கொரோனா வைரஸ் தாக்குதல் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் கட்டுக்குள் வரும் எனத் தெரிவித்துள்ளார்.

சீன நாட்டின் வூஹான் நாட்டிலிருந்து இந்த வைரஸ் பரவியிருந்தாலும் மற்ற நாடுகளில் வைரஸின் பாதிப்பு அதிகளவில் இல்லை என ஜாங் நான்ஷன் என்னும் சுவாச நோய் நிபுணர் தெரிவித்துள்ளார்.

கடந்த புதன்கிழமையன்று கிடைத்த தகவல்படி, புதியதாக 29 உயிரிழப்புகளும், 433 வைரஸ் தாக்குதல் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளதாகச் சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்தது.

இரண்டாயிரத்து 358 மக்கள் வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாகச் சந்தேமடைந்திருப்பதாகவும் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்தது. இதுவரை 32 ஆயிரத்து 495 பேர் குணமான பின்பு மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் மூன்று பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பாகிஸ்தானிலும் கொரோனா - 2 பேர் பாதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.