நேபாள எல்லைக்குட்பட்ட பல பகுதிகளைச் சீனா ஆக்கிரமித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக நேபாள அரசு மௌனம்காத்துவரும் வேளையில், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளைச் சீனாவுடன் பேசி மீட்டெடுக்குமாறு அந்நாட்டு எதிர்க்கட்சியினர் நேபாள நாடாளுமன்ற கீழவையில் தீர்மானம் தாக்கல் செய்துள்ளனர்.
இதுதொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்ற கீழவைச் செயலருக்கு எதிர்க்கட்சி அனுப்பிய கடிதத்தில், "டோக்லாம், ஹும்லா, சின்துபால்சவுக், கோர்க்கா, ரஸுவாமா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 64 ஹெக்டேருக்கும் அதிகமான நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளது.
கோர்க்கா மாவட்டம் ரூய் கிராமத்தில் பில்லர் எண் 35ஐ சீனா வேறு இடத்துக்கு மாற்றியமைந்துள்ளது. அங்கு 72 குடியிருப்பு வீடுகள் சீனாவின் திபெத் தன்னாட்சி பிராந்திய கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன. அதேபோல, தார்சுலா மாவட்டத்தில் உள்ள ஜியூஜியூ பகுதியிலும் 18 வீடுகளை சீனா தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளது. ஆகையால் அந்நாட்டுடன் நேபாள அரசு பேச்சுவார்த்தை நடத்தி ஆக்கிரமிப்புப் பகுதிகளை மீட்டெக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : பிரதமர் பேச்சுக்கு மாறாக உள்ளது லடாக் நிலவரம் - ப. சிதம்பரம் குற்றச்சாட்டு