பிலிப்பைன்ஸ் நாட்டின் பாலவான் பகுதியில் உள்ள சிற்றோடையைக் கடப்பதற்குப் பாலம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அங்கு ஹஷிம் (15) மற்றும் அவளது சகோதரி ஹைனா (12) ஆகிய இருவரும் கடந்து செல்லமுயன்றனர். அப்போது, முதலில் ஹஷிம் பாலத்தில் நடந்து மறுகரையை அடைந்தார். பின்னர் தான் தனது தங்கை அழுகை குரலைக் கேட்டுள்ளார்.
இதனையடுத்து, திரும்பிப் பார்த்தபோது, தங்கையின் கால் பகுதியை 14 அடி நீளம்கொண்ட முதலை பிடித்து பாலத்திலிருந்து தண்ணீருக்குள் இழுக்க முயற்சி செய்துகொண்டிருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஹஷிம் அருகில் கிடந்த கற்களை முதலையின் மீது வீசினார். இதைத்தொடர்ந்து அந்த முதலை சிறுமியை விட்டுவிட்டு அங்கிருந்து சென்றது.
இது குறித்து ஹைனா கூறுகையில்," முதலை என்னை விட பெரிதாக இருந்தது. அது எனது காலை கவ்விய போது நான் பயத்தில் கதறி அழுதேன். முதலையின் வாயில் பெரிய பற்களையும் பார்த்தேன். நான் பயத்தில் அண்ணா காப்பாற்று என கத்தினேன். எனது அண்ணன் உடனடியாக கற்களை வீசி, என்னை காப்பாற்றினான். என் உயிரைக் காப்பாற்றிய அண்ணனை மிகவும் நேசிக்கிறேன் "எனத் தெரிவித்தார்
தற்போது, ஹைனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் காவல் ஆய்வாளர் லெப்டினன்ட் கேணல் ஃபால்டடோ கூறுகையில்," இந்த முதலை மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. இந்த சிறுவனின் வீரத்தைப் பாராட்டுகிறேன் " எனத் தெரிவித்தார்.
இதற்கு முன்பு, 11 வயது சிறுமி தனது தோழியைக் காப்பாற்ற முதலையின் கண்களைக் குத்திய சம்பவம் ஜிம்பாப்வேவில் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நாய்க்குட்டிக்கு யூனிகார்ன் போல் நெற்றியில் கூடுதல் வால் - தத்தெடுக்கக் குவியும் மக்கள்