ETV Bharat / international

100 நாட்களுக்குப் பின் இந்தோனேஷியா சென்றடைந்த ரோஹிங்கியா அகதிகளின் படகு - rohingya crisis india

வங்கதேசத்தின் கடலோரப் பகுதியில் உள்ள காக்ஸ் பஜாரில் இருந்து கடல் வழியாக புறப்பட்ட 81 இஸ்லாமிய ரோஹிங்கியா அகதிகள் 100 நாட்களுக்கும் மேலாகப் பயணித்து, இந்தோனேசியாவின் ஆச்சேவை அடைந்துள்ளனர்.

ரோஹிங்கியா அகதிகளுடன் சென்ற படகு 100 நாட்களுக்குப் பின் ஆச்சேவை அடைந்தது

author img

By

Published : Jun 5, 2021, 11:45 AM IST

கொல்கத்தா: வங்கதேசத்தின் கடலோரப் பகுதியில் உள்ள காக்ஸ் பஜாரில் இருந்து கடல் வழியாக புறப்பட்டு 100 நாட்களுக்கும் மேலாகப் பயணித்து, 81 இஸ்லாமிய ரோஹிங்கியா அகதிகள் இந்தோனேசியாவின் ஆச்சேவை அடைந்துள்ளனர்.

பிப்ரவரி 18ஆம் தேதி வங்கதேசத்தில் இருந்து கடல் மார்க்கமாக புறப்பட்டு அவர்கள் பயணிக்கையில், ஒரு வாரத்திற்குப் பிறகு, அவர்கள் சென்ற படகு தீவிர தொழில் நுட்ப பிரச்னைகளைச் சந்தித்துப் பின்னர் அந்தமான் தீவுகள் அருகே சிக்கிக்கொண்டனர்.

அவ்வாறு சிக்கிக்கொண்ட அகதிகளுக்கு இந்திய கடலோர காவல்படையினர் உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கினர். படகில் பழுதுபார்க்க ஏற்பாடு செய்தனர். ஆனால், அந்த படகை இந்தியநாட்டின் கரைகளுக்கு அனுமதிக்கவில்லை.

இந்த அகதிகளை திரும்ப அழைத்துச் செல்ல இந்தியா வங்கதேச நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்றது. ஆனால், வங்கதேசம் அவர்களை திரும்ப அழைத்துச் செல்ல மறுத்ததால், அந்தமானைச் சார்ந்த அலுவலர்கள் அமைதியாக பழுதுபார்க்கும் பணிகளை அனுமதித்து ரோஹிங்கியாக்களை கவனித்துக்கொண்டனர்.

இதையடுத்து கடந்த மே 30அன்று, சரிசெய்யப்பட்ட படகு புறப்பட்டு, ஜுன் 4ஆம் தேதி ஆச்சேவை அடைந்தது.

அகதிகள் இந்தோனேசிய எல்லைக்குள் பாதுகாப்பாக வருவது குறித்து கப்பல் உரிமையாளரால் தெரிவிக்கப்பட்டது. கடலில் சிக்கித் தவித்த ரோஹிங்கியா இஸ்லாமியர்களுக்கு உதவிய ஒருவர் கூறுகையில், ' அவர்கள் இந்தப் படகின் மூலம் எளிதில் தென்கிழக்கு ஆசியாவின் கடல் எல்லையை அடைந்துவிட முடியும் என நினைத்தார்கள். ஏனென்றால் அவர்கள் எவ்வளவு தூரம் செல்வார்கள் என்று குழுவினருக்குத் தெரியவில்லை. தென்கிழக்கு ஆசியாவை நோக்கிய பயணத்தில் பிப்ரவரி 18 அன்று படகின் இயந்திரம் சிக்கலை உருவாக்கிய பின்னர், பயணம் செய்த 90 ரோஹிங்கியாக்களில் எட்டு பேர் (65 பெண்கள், 20 ஆண்கள் மற்றும் 5 குழந்தைகள்) ஏற்கெனவே வயிற்றுப்போக்கு மற்றும் நீரிழப்பு காரணமாக இறந்துவிட்டனர். இதையடுத்து அவர்களைத் தொடர்புகொண்டு நிவாரணம் வழங்கிய இந்திய கடலோர காவல் படைக்கு அக்கப்பலில் பயணித்த அகதிகள் நன்றி தெரிவித்தனர்.

முன்னதாக மனிதாபிமான அடிப்படையில் அகதிகளை கவனித்துக் கொள்ளுமாறு ஐ.நா. பிப்ரவரியில் இந்தியாவிடம் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

படகில் 47 ரோஹிங்கியாக்கள் ஒன்று சேர்ந்து 'அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையரகம்' (United Nations High Commissioner for Refugees) வழங்கிய அகதிகள் அட்டைகளை வங்கதேசத்தில் வழங்கியதை இந்திய அலுவலர்கள் உறுதிப்படுத்தினர். இந்தியாவின் சாத்தியக்கூறுகள் குறித்து கவலைப்பட்ட மனிதநேய ஆர்வலர்கள் ரோஹிங்கியாக்களை மியான்மரிடம் ஒப்படைக்க முயற்சித்து, ஜுன் 4ல் படகு ஆச்சேவில் தரை இறங்கியதாக நிம்மதி அடைந்துள்ளனர்.

ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் செல்லும் படகுகள் தொடர்ந்து இந்தியாவின் அந்தமான் தீவுகளை நோக்கி நகர்ந்து வருகின்றன. இந்திய அரசாங்கம் அவர்களை நாட்டின் உள்ளே அழைத்துச் செல்ல ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு: முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.