Blue sapphire stone: கொழும்பு: மூன்று மாதங்களுக்கு முன்னர் இலங்கையின் இரத்தினபுரியில் மிகவும் அரிதான மற்றும் விலைமதிப்பற்ற ரத்தினம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கல் ஆசியாவின் ராணி என அழைக்கப்படுகிறது.
இலங்கையின் தேசிய ரத்தினம் மற்றும் ஆபரண அமைப்பின் சார்பில் இந்த கல் விரைவில் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்பட உள்ளது. இதற்காக இலங்கை அரசு சார்பில் சில ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்த நீல ரத்தின கல்லை இலங்கை பெறுமதியில் 2 ஆயிரம் கோடி ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.மேலும், இந்த ரத்தினக்கல்லை துபாய் நிறுவனம் ஒன்று கொள்முதல் செய்யப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : லக்கிம்பூர் கேரி வன்முறை; ஆஷிஷ் மிஸ்ரா முக்கிய குற்றவாளியாக சேர்ப்பு!