ஆப்கானிஸ்தானில் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து, பயங்கரவாத அச்சுறுத்தல், எதிர்க்கட்சிகள் கொடுத்த அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் நீண்ட இழுபறிக்குப் பிறகு கடந்த மாதம் பிப்ரவரி 18ஆம் தேதி இத்தேர்தலின் முடிவுகள் வெளியாயின. இதில், அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனியின் கட்சி கடும் போட்டிக்கு இடையே வெற்றிபெற்றது.
இதையடுத்து, அந்நாட்டின் அதிபர் மாளிகையில் இன்று அஷ்ரஃப் கனிக்கு பதவியேற்பு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், அஷ்ரஃப் கனி பதவிப் பிரமாணம் வாசிக்கும் போது அங்கு வெடிகுண்டுத் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. அந்தச் சம்பவத்தின் போது அஷ்ரஃப் கனி மேடைவிட்டு இறங்கவில்லை.
இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவம் குறித்து அந்நாட்டு அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தலிபான் பயங்கரவாதிகள்-ஆப்கானிஸ்தான் அரசுக்கு இடையே நாளை அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்க உள்ள சூழலில், அதிபர் பதவியேற்பு விழாவில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது குறிப்பிடத்கக்கது.
இதையும் படிங்க : அமெரிக்காவில் 500 பேருக்கு மேல் கொரோனா வைரஸ் பாதிப்பு!