பாகிஸ்தான் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பெல்லி டான்ஸ்சர்ஸ் நடனமாடிய காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான், முதலீட்டார்களை ஈர்க்க அஜர்பெய்ஜான் மாகாண தலைநகர் பகுவில் செப். 4 முதல் 8ஆம் தேதிவரை முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியது.
'கைபர் பக்துன்வா முதலீட்டாளர்கள் மாநாடு' (Khyber Pakhtunkhwa Opportunies Conference) என்று தலைப்பிடப்பட்ட இந்த மாநாட்டில், முதலீட்டாளர்களைக் கவரும் புதிய முயற்சியாக பெல்லி டான்ஸ்சர்ஸ் நடனமாடியுள்ளனர்.
இது தொடர்பான காணொலியை பாகிஸ்தான் பத்திரிகையாளர் குல் புகாரி தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, 'பகுவில் நடந்த மாநாட்டில், முதலீட்டாளர்களைக் கவரும் வண்ணம் பாகிஸ்தான் தலைமைப் பொருளாதார ஆலோசகர் முயற்சித்தபோது..." என கேப்ஷன் வைத்திருந்தார்.
இந்தப் பதிவில் ஏராளமானோர் பாகிஸ்தானை விமர்சித்தும், கிண்டலடித்தும் கமெண்ட் செய்துவருகின்றனர். இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.