வங்க தேசத்தில் இஸ்லாமியத் திருமண சட்டப்படி திருமண சான்றிதழில் மணப்பெண்கள் தங்களது கன்னித்தன்மையை குறிப்பிட வேண்டும்.
இது, பெண்களின் தனியுரிமைக்குப் பாதகம் விளைப்பதாகவும், இந்தச் சட்டத்தை நீக்கக் கோரியும் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு பெண்கள் உரிமைக் குழு வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தீர்ப்பளித்த வங்க தேச உச்சநீதிமன்றம், திருமண சான்றிதழில் கன்னித்தன்மையை குறிப்பிட தேவையில்லை என்று உத்தரவிட்டுள்ளது.
இந்த தீர்ப்பானது அந்நாட்டுப் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.