ETV Bharat / international

வங்கதேச எல்லையில் மீண்டும் தொலைத்தொடர்பு சேவைகள் தொடக்கம் - வங்க தேச எல்லையில் திரும்பியது தொலைத் தொடர்பு சேவை

டாக்கா: இந்தியாவுடனான எல்லைப் பகுதிகளில் முடக்கப்பட்டிருந்த தொலைத்தொடர்ப்பு சேவைகளை மீண்டும் தொடங்கப்பட்டன.

bangladesh restores telecom service
bangladesh restores telecom service
author img

By

Published : Jan 2, 2020, 10:11 AM IST

இந்தியாவில் சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

இந்தச் சூழலில், இந்திய எல்லையையொட்டியுள்ள பகுதிகளில் அசம்பாவிதங்களைத் தடுக்கும்விதமாக அப்பகுதிகளில் அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளையும் துண்டிக்க வங்கதேச அரசு உத்தரவிட்டது.

அதனடிப்படையில், எல்லையையொட்டி 32 மாவட்டங்களில் உள்ள இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தொலைத்தொடர்பு கோபுரங்களின் சேவை கடந்த திங்கள்கிழமை அன்று தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டது. இதனால் அங்கு வசிக்கும் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் சிரமத்துக்குள்ளாகினர்.

இந்நிலையில், நேற்று (புதன்கிழமை) அப்பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன.

இது தொடர்பாக வங்கதேச உயர் அலுவலர் ஒருவர் கூறுகையில், "இந்திய எல்லையையொட்டியுள்ள பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவைகளை மீண்டும் தொடங்க அனைத்து தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டப்பட்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க : அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை - அன்புமணி

Intro:Body:

S1

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.