புல்புல் புயலானது சனிக்கிழமை (நவம்பர் 9) இரவு 8.30 - 11.30 மணியளவில் சுந்தர்பன் வனப்பகுதிக்கு அருகிலுள்ள மேற்குவங்க கடற்கரை அருகே கரையைக் கடந்தது. இந்தப் பகுதி வங்கதேசத்தை ஒட்டியிருப்பதால் அங்குள்ள கடற்கரை மாவட்டங்களுக்கும் இரண்டு துறைமுகங்களுக்கும் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புல்புல் புயல் காரணமாக சுந்தர்பன் காடுகள் அருகேயுள்ள தென்மேற்கு குல்னா பகுதியில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற வங்கதேச அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், இந்தப் புயல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 55,000 தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
புல்புல் புயலால் வங்கதேசத்தில் இதுவரை 10 லட்சம் பேர் தாழ்வான பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 13 கடலோர மாவட்டங்களில் வசிக்கும் மக்களை இன்று மதியம் பாதுகாப்பான இடத்தில் இருக்குமாறு வங்கதேச பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் எனமூர் ரஹ்மான் அறிவுறுத்தியுள்ளார்.
புயல் மீட்புப் பணிகளில் ஈடுபட ஏதுவாக, கடலோர மாவட்டங்களிலுள்ள அனைத்து அலுவலர்களின் விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ‘இந்திய - நேபாள உறவில் உருவாகியுள்ள புதிய சிக்கல்!’ - ஸ்மிதா சர்மா