ஈராக் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனையில் நேற்றிரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அங்கு கோவிட்-19 பாதித்தோருக்கு சிகிச்சை அளிக்கும் வார்டில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வெடித்துச் சிதறின.
இதையடுத்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 82-க்கும் மேற்பட்ட நோயாளிகள் உயிரிழந்தனர். மருத்துமனை வளாகங்களில் தீ பரவிய நிலையில் சம்பவயிடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் 90-க்கும் மேற்பட்ட நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்களை மீட்டனர்.
தீ விபத்தில் சிக்கி 110-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்த அந்நாட்டு பிரதமர் முஸ்தபா அல் கதிமி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு 600-க்கும் மேற்பட்ட கருவிகள் தந்து உதவும் பிரிட்டன்