சர்வதேச அளவில் போதைப்பொருள் நடவடிக்கைகளைத் தடுக்க ஒவ்வொரு நாடும் பெரும் முயற்சியை எடுத்துவருகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் குவின்ஸ்லாந்து மாகாணத்தில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 766 கிலோ எம்.டி.எம்.ஏ.(MDMA) என்ற போதைப்பொருளை ஆஸ்திரேலியா போலீஸார் கைப்பற்றியுள்ளனர். சர்வதேச அளவில் இதன் மதிப்பு 60 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 4 ஆயிரம் கோடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த கடத்தல்காரர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்த சோதனையில் பிரிட்டனை நாட்டைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்களில் இதுதான் மிகவும் சக்திவாய்ந்தது என்றும் ஆஸ்திரேலியா வரலாற்றிலேயே இதுதான் மிகப்பெரிய போதைப் பொருள் பறிமுதல் என்றும் குவின்ஸ்லாந்து காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.