ஆஸ்திரேலியா அரசு ஒரு பிரத்யேக துறையை உருவாக்கி வாடிக்கையாளர்களின் முகநூல் மற்றும் கூகுள் பயன்பாட்டை கண்காணிக்க முடிவு செய்துள்ளது. அது மட்டுமின்றி நாட்டின் நம்பிக்கையற்ற சட்டங்கள் மதிக்கப்படுவதை உறுதி செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது.
ACCC என்ற குழு அளித்த அறிக்கையில், விளம்பரம் சேவை சந்தைகள் மற்றும் ஊடக துறையில்தான் டிஜிட்டல் தேடுபொறிகள், சமூக ஊடகங்களின் தாக்குதல் அதிகம் உள்ளது என குறிப்பிட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல் அனைத்தும் இந்த வலைதளங்களில் அடங்கி உள்ளதால் சமூக ஊடகங்கள் தங்களது வலைதளங்களை பயன்படுத்த நிர்பந்திகின்றனர்.
இதனால் தகவல் திருட்டு நடைபெற வாய்ப்பு உள்ளதால், வாடிக்கையாளர்களின் தனி உரிமையை கண்காணிக்க ஆஸ்திரேலிய போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம் முடிவு செய்துள்ளது.