ETV Bharat / international

கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி எப்போது? ஆஸ்திரேலிய அரசு தகவல் - ஆஸ்திரேலியா கரோனா பாதிப்பு நிலவரம்

ஆஸ்திரேலியாவில் பிப்ரவரி மாதத்திலிருந்து கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியைத் தொடங்க அந்நாட்டு அரசு முடிவுசெய்துள்ளது.

ஆஸ்திரேலேயி பிரதமர் ஸ்காட் மாரிசன்
ஆஸ்திரேலேயி பிரதமர் ஸ்காட் மாரிசன்
author img

By

Published : Jan 7, 2021, 6:22 PM IST

கான்பரா: ஆஸ்திரேலியாவில் பிப்ரவரி மாதம் 15ஆம் தேதிக்கு மேல் மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியைத் தொடங்க அந்நாட்டு அரசு முடிவுசெய்துள்ளது. மார்ச் மாதத்திற்குள் அந்நாட்டின் மொத்த மக்கள் தொகை எண்ணிக்கையில் 15 விழுக்காட்டினருக்குத் தடுப்பூசியைச் செலுத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னதாக, ஆஸ்திரேலியாவில் கரோனா பரவல் குறைவாக இருப்பதால், கரோனா தடுப்பூசியின் அவசரகால அனுமதிக்கு அவசியமில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்திருந்தது. எனவே, சற்று காலதாமதாக மார்ச் மாதம் முதல் தடுப்பூசி செலுத்தும் பணித் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன், "ஜனவரி மாத இறுதியில், ஆஸ்திரேலிய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் அனுமதி கிடைத்தவுடன், ஃபைசர் நிறுவனத்தின் கரோனா தடுப்பு மருந்து அடுத்த இரண்டு வாரங்களில் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவான, ஒரு நோய்த் தடுப்பூசிக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடைமுறையைக் காட்டிலும், சற்று வேகமாகவே கரோனா தடுப்பூசி அனுமதி நடைமுறைகள் நடைபெற்றுவருகின்றன.

வாரத்திற்கு 80 ஆயிரம் பேர் என்ற அடிப்படையில், மார்ச் மாத இறுதிக்குள் 26 மில்லியன் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தி முடிக்க திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

இதையும் படிங்க: தோல்வியை ஒப்புக்கொண்டார் ட்ரம்ப்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.