ETV Bharat / international

ஆஸ்திரேலியாவில் 500-ஐ தொட்ட கரோனா: நெருக்கடி நிலை அமல்

ஆஸ்திரேலியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 500-ஐ தாண்டியதை அடுத்து அந்நாட்டில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.

Australia
Australia
author img

By

Published : Mar 18, 2020, 10:55 AM IST

ஆஸ்திரேலியாவில் கரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 500-ஐ தாண்டியுள்ளது. இதுவரை 539 பேர் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 84ஆக உயர்ந்துள்ளதால், அந்நாட்டு அரசு தற்போது அவசர நிலை அறிவித்துள்ளது.

இது குறித்து அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மாரிசன், உலகின் வாழ்க்கை முறை மாறிவருவதைப் போல் ஆஸ்திரேலியாவின் வாழ்க்கை முறையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், நூறாண்டுகளுக்கு ஒருமுறை வரும் கரோனா போன்ற அபாயத்தை எதிர்கொள்ள ஆஸ்திரேலியா தயாராகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டுப் பயணங்களை முற்றிலுமாகத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்த ஸ்காட் மாரிசன், தவிர்க்க முடியாத காரணங்களால் வெளிநாடு செல்லும் குடிமக்கள் அங்கு சிக்கலைச் சந்திக்க நேரலாம் எனவும் எச்சரித்துள்ளார்.

இதையும் படிங்க: கொரோனா நோயாளியைச் சந்தித்த இவாங்கா... பீதியில் வீட்டிலிருந்தபடியே வேலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.