மியான்மர் உடனான வர்த்தக, முதலீட்டு, பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் வியட்நாம் பிரதமர் நிகுயென் ஸ்வான் பூக் அங்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
பயணத்தின் ஒரு பகுதியாக இன்று மியான்மர் பிரதமர் ஆங்சன் சூகியை நேரில் சந்தித்து பல்வேறு பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
ரோஹிங்கியா மக்களை இனப்படுகொலை செய்யதாக மியான்மர் பிரதமர் சூகி மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், அது குறித்து சர்வதேச நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது. மியான்மரில் துன்புறுத்தல்களுக்கு ஆளான ரோஹிங்கியா மக்கள் அண்டை நாடுகளான வங்கதேசம், இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இதையும் படிங்க : தென் சூடான் அமைதிக்கு இடையூறு: அமைச்சர்கள் மீது அமெரிக்கா கெடுபிடி