சீனாவின் பல்வேறு மாகாணங்கள் தற்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கியுஸு மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பொழிந்தது. இதன் காரணமாக பல்வேறு பாதிப்புகளை இம்மாகாணம் எதிர்கொண்டுள்ளது. அதிலும், 751 ஏக்கர் விவசாய நிலங்கள் மிகப்பெரிய சேதத்தை சந்தித்துள்ளன. மேலும், இந்த மழையில் சிக்கி நான்கு பேர் மாயமாகியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட இடங்களில் சிச்சுவான் மாகாண அவசரகால மீட்புப் படையினர் தற்காலிக கூடாரங்களை அமைத்து மீட்புப்பணிகளை தொடங்கவுள்ளனர். இதற்கிடையே, கியுஸு மாகாணத்தின் குய்லின், லியுஸு, பாய்சி உள்ளிட்ட நகரங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.