ETV Bharat / international

அர்மேனியா அதிபர் திடீர் ராஜினாமா - அர்மேனியா அசர்பைஜான் மோதல்

தேவையான அதிகாரம் இல்லாததால் தான் பதவி விலகுவதாக அர்மேனியா நாட்டு அதிபர் திடீரென அறிவித்துள்ளார்.

Armenian President
Armenian President
author img

By

Published : Jan 24, 2022, 7:15 AM IST

அர்மேனியா நாட்டு அதிபர் அர்மென் சர்கிஸியன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக திடீரென்று அறிவித்துள்ளார். தனது பதவிக்கு தேவையான அதிகாரம் வழங்கப்படவில்லை எனக் காரணம் காட்டி இந்த முடிவை அவர் மேற்கொண்டார்.

2018ஆம் ஆண்டு அதிபராக சர்கிஸியன் பதவியேற்ற பின் அர்மேனியாவுக்கு அண்டை நாடான அசர்பைஜானுக்கு இடையே போர் ஏற்பட்டது. இதில் அர்மேனியா நாடு பெரும் பின்னடைவை சந்தித்தது.

இந்நிலையில், "நாடு மோசமான சூழலை சந்தித்துவரும் வேளையில், அதிபருக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கைகளை வகுப்பதில் எந்த பங்கும் இல்லை என்பது வருந்தத்தக்கது.

எனவே பதவியை ராஜினாமா செய்கிறேன். விரைவில் அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு அடுத்த அதிபர் முறையான நிர்வாகம் வழங்கும் சூழல் உருவாகும் என நம்புகிறேன்" என தனது ராஜினாமா அறிக்கையில் அர்மென் சர்கிஸியன் தெரிவித்துள்ளார்.

நேரடி அதிபர் ஆட்சி முறையில் இருந்த அர்மேனியாவில் 2015ஆம் ஆண்டு நாடாளுமன்ற ஜனநாயக முறை ஆட்சி கொண்டுவரப்பட்டது. அதன்பின்னர், நாடாளுமன்றம் மற்றும் பிரதமருக்கு முதன்மை அதிகாரங்கள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 98 வயதிலும் ஆர்வத்துடன் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பாட்டி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.