ETV Bharat / international

அமைதியை நிலைநாட்டும் வகையில் அர்மேனியா, அசர்பைஜான் நாடுகள் ஒப்பந்தம்!

யெரவன்: அர்மேனியா, அசர்பைஜான் நாடுகளுக்கிடையே நிலவும் பதற்றத்தை குறைக்கும் வகையில் காராபக் பகுதியில் நடைபெற்ற மோதலின்போது கைது செய்யப்பட்ட போர் கைதிகளை விடுவிக்க இரு நாடுகளும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.

author img

By

Published : Dec 5, 2020, 6:42 PM IST

பாஷினியன்
பாஷினியன்

அர்மேனியா-அசர்பைஜான் நாடுகளுக்கு இடையே கடந்த செப்டம்பர் 27ஆம் தேதியிலிருந்து போர் நடைபெற்று வருகிறது. சர்ச்சைக்குரிய பிராந்தியமான நகோர்னோ-காராபக் பகுதியில் இரு நாடுகளும் கடுமையாக சண்டையிட்டு வருகின்றன.

இந்த மோதலை சீர்செய்ய அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், இரு நாடுகளுக்கிடையே அமைதியை நிலைநாட்டும் வகையில் காராபக் பகுதியில் நடைபெற்ற மோதலின்போது கைது செய்யப்பட்ட போர் கைதிகளை விடுவிக்க அர்மேனியா, அசர்பைஜான் நாடுகள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.

இதுகுறித்து நகோர்னோ - காராபக் குடியரசின் மனித உரிமை ஆர்வலர் அர்தக் பெக்லாரியன் கூறுகையில், "காராபக் பகுதியை சேர்ந்த 60 ராணுவ வீரர்களையும் 40 அப்பாவி மக்களையும் அசர்பைஜான் கைது செய்துள்ளது" என்றார்.

இதுகுறித்து அர்மேனியா பிரதமர் பாஷினியன் கூறுகையில், "போர் கைதிகளை விடுவிப்பது முக்கியமான செயலாக கருதப்படுகிறது.

அதில், சொல்ல தகுந்த அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கொள்கையின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. காணாமல் போனவர்களை தேடுவது மற்றொரு விவகாரமாக பார்க்கப்படுகிறது.

கொல்லப்பட்ட ராணுவ வீரர்களில் 600 பேரின் உடல்கள் அசர்பைஜான் நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில், 500 பேரின் அடையாளம் தெரியவில்லை" என்றார்.

இதையும் படிங்க: அதிகரிக்கும் கரோனா பரவல் : எவ்வாறு நடக்க உள்ளது பதவியேற்பு விழா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.