ஆப்கானிஸ்தான் ராணுவம் பயங்கரவாதிகளுக்கு எதிராக தொடர்ந்து நடவடிக்கை எடுத்துவருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடைசி 24 மணி நேரத்தில் அந்நாட்டில் உள்ள 15 பிராந்தியங்களில் 18 ராணுவ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதில், 109 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 45 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும், ஐந்து பயங்கரவாதிகளை ராணுவம் கைது செய்துள்ளது. கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் அனைவரும் ஒரே அமைப்பைச் சேர்ந்தவர்களா என்பது குறித்து தகவல் இல்லை.
ஆப்கானிஸ்தானில் அதிபர் பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெற்றது. நவம்பர் 14ஆம் தேதி வெளியாக வேண்டிய தேர்தல் முடிவுகள், தலிபான்களின் அச்சுறுத்தல்கள் காரணமாக இருமுறை தள்ளிவைக்கப்பட்டன. தேர்தல் முடிவுகள் தள்ளிவைக்கப்பட்ட காரணத்தினால் ஆப்கானிஸ்தானில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்தன.
-
In last 24 hours, 18 operations were conducted in 15 provinces of #Afghanistan, as a result of which 109 terrorists were killed, 45 terrorists injured and 5 others were arrested.#MOD
— Ministry of Defense, Afghanistan (@MoDAfghanistan) December 24, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">In last 24 hours, 18 operations were conducted in 15 provinces of #Afghanistan, as a result of which 109 terrorists were killed, 45 terrorists injured and 5 others were arrested.#MOD
— Ministry of Defense, Afghanistan (@MoDAfghanistan) December 24, 2019In last 24 hours, 18 operations were conducted in 15 provinces of #Afghanistan, as a result of which 109 terrorists were killed, 45 terrorists injured and 5 others were arrested.#MOD
— Ministry of Defense, Afghanistan (@MoDAfghanistan) December 24, 2019
முடிவுகள் வெளியிடப்பட்டு அதிபராக அஷ்ரஃப் கனி பொறுப்பேற்க உள்ள நிலையில், ராணுவம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்த சட்டம் இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்னை - ரஷ்யா