இந்தியர்கள் கடத்தல்
ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கு மாகாணமான பக்லானில் உள்ள மின்சார உற்பத்தி நிலையத்தில் ஏழு இந்திய பொறியாளர்கள் வேலையில் இருந்தனர். அப்போது அவர்கள் பயங்கரவாதிகளால் பிணைக் கைதியாக பிடிக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்துக்கு எந்தவொரு பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.
விடுதலை
இந்தச் சம்பவம் கடந்த ஆண்டு மே மாதம் நடந்தது. இவர்களை மீட்க இந்தியா தரப்பில் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் பிணைக்கைதியாக இருந்த மூன்று பொறியாளர்கள் தலிபான் பயங்கரவாதிகளால் விடுவிக்கப்பட்டனர். சென்ற மார்ச் மாதம் ஒருவர் விடுவிக்கப்பட்டார். மீதமுள்ளவர்கள் நிலைமை என்னானது? என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. மேலும் பொறியாளர்கள், விடுவிக்க இடம் தொடர்பான தகவலும் கொடுக்கப்படவில்லை.
இதையும் படிக்கலாமே