அமெரிக்க-தாலிபான் இடையே அமைதி ஒப்பந்தம் மிக நீண்ட தாமதத்துக்கு பின்னர் கடந்த மாதம் (பிப்ரவரி) 29ஆம் தேதி கத்தாரில் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்பேரில் ஐயாயிரம் தாலிபான் கைதிகள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட உள்ளனர்.
இந்தக் கைதிகளிடம் சில உத்தரவாதங்கள் பெறப்பட உள்ளன. அதில் முதன்மையானது, 'இனி போர்க்களம் திரும்ப மாட்டோம்' என்பதே ஆகும். இந்நிலையில் முதல்கட்டமாக ஆயிரத்து 500 தாலிபான் சிறைக் கைதிகள் இன்று விடுவிக்கப்பட்டனர்.
இதற்கான ஆணையில் அதிபர் அஷ்ரஃப் ஹானி கையெழுத்திட்டார். மீண்டும் அதிபரான பின்பு, அஷ்ரஃப் ஹானி கையெழுத்திட்ட மிக முக்கியமான கோப்பு இதுவாகும். முன்னதாக இதில் கையெழுத்திட ஹானி மறுத்துவிட்டார்.
-
President Ghani has signed the decree that would facilitate the release of the Taliban prisoners in accordance with an accepted framework for the start of negotiation between the Taliban and the afghan government. Details of the decree will be shared tomorrow.
— Sediq Sediqqi (@SediqSediqqi) March 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">President Ghani has signed the decree that would facilitate the release of the Taliban prisoners in accordance with an accepted framework for the start of negotiation between the Taliban and the afghan government. Details of the decree will be shared tomorrow.
— Sediq Sediqqi (@SediqSediqqi) March 10, 2020President Ghani has signed the decree that would facilitate the release of the Taliban prisoners in accordance with an accepted framework for the start of negotiation between the Taliban and the afghan government. Details of the decree will be shared tomorrow.
— Sediq Sediqqi (@SediqSediqqi) March 10, 2020
அஷ்ரஃப் ஹானி மீண்டும் அதிபராகப் பதவியேற்ற நிலையில், அவரது பதவியேற்பு விழாவில் குண்டுவெடித்தது. இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.
இதையும் படிங்க: ஒன்றுகூடும் எதிர்க்கட்சியினர்...இஸ்ரேல் பிரதமருக்கு புது சிக்கல்