பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தங்களுக்கு மிகவும் பிடித்த நபர்களுடன் புகைப்படம் எடுப்பது, கை குலுக்குவதை பெருமையாக நினைப்போம். அதைப் போல், அபுதாபியின் இளவரசர் ஷேக் முகமது பின் சயீத், நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, வரிசையாக நின்ற பல சிறுவர்களுடன் கை குலுக்கினார்.
- — عبدالله بن زايد (@ABZayed) December 2, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
— عبدالله بن زايد (@ABZayed) December 2, 2019
">— عبدالله بن زايد (@ABZayed) December 2, 2019
அப்போது, இளவரசர் வருவதைப் பார்த்து ஆசையாக வரிசையில் நின்று கை நீட்டிய சிறுமியை கவனிக்காமல் இளவரசர் சென்று விட்டார். இந்த காணொலி சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியதையடுத்து, இளவரசர் ஷேக்கின் கவனத்திற்குச் சென்றுள்ளது.
இதனையடுத்து, சிறுமியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக சிறுமியின் இல்லத்தைக் கண்டுபிடித்து நேரடியாக சென்று இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார். மேலும், சிறுமிக்கு முத்தம் கொடுத்து தனது அன்பைப் பரிமாறியும், ஆசையாக சிறுமியுடன் பல புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார்.
-
زرت اليوم الطفلة عائشة محمد مشيط المزروعي وسعدت بالسلام عليها ولقاء أهلها. pic.twitter.com/XY3N3nU6Dd
— محمد بن زايد (@MohamedBinZayed) December 2, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">زرت اليوم الطفلة عائشة محمد مشيط المزروعي وسعدت بالسلام عليها ولقاء أهلها. pic.twitter.com/XY3N3nU6Dd
— محمد بن زايد (@MohamedBinZayed) December 2, 2019زرت اليوم الطفلة عائشة محمد مشيط المزروعي وسعدت بالسلام عليها ولقاء أهلها. pic.twitter.com/XY3N3nU6Dd
— محمد بن زايد (@MohamedBinZayed) December 2, 2019
இதுகுறித்து இளவரசர் ஷேக் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் பகிர்ந்தார். இந்த ட்விட்டர் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
இதையும் படிங்க: புது மொபைல் வாங்கினால் முகத்தை பதிவு செய்யவேண்டியது கட்டாயம்!