மியான்மர் நாட்டின் கச்சின் மாநிலத்தில் ஹபகாந்த் பகுதியில் பச்சை மாணிக்க கல் சுரங்கம் அமைந்துள்ளது. இன்று வழக்கம்போல் சுரங்கத்தில் பச்சை மாணிக்க கல் வெட்டி எடுக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
அப்போது இன்று காலை 8 மணியளவில் பருவமழை காரணமாக அங்கு நிலச்சரிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 125 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 200 பேர் நிலச்சரிவில் சிக்கியுள்ளனர் என மியான்மர் அரசு தெரிவித்துள்ளது.
தற்போது நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களையும், அங்கு உயிரிழந்துள்ளவர்களின் சடலங்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கச்சின் மாநிலத்தில் இதுபோன்று நிலச்சரிவு அடிக்கடி ஏற்படுவது வழக்கம்தான். கடந்த 2015 நவம்பர் மாதத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 116 பேர் உயிரிழந்தது பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலச்சரிவாகக் இருந்தது. ஆனால் இம்முறை அதனை காட்டிலும் அதிகமானோர் உயிரிழந்திருப்பது அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.