பெஷாவர்: பாகிஸ்தானில் பேருந்து ஒன்றில் நடந்த குண்டுவெடிப்பில் சீனர்கள் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதல் சீனர்கள் மீது நடத்தப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.
இந்தத் தாக்குதலை இஸ்லாமாபாத்தில் உள்ள சீனத் தூதரகம் உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாகிஸ்தானில் சீனர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இதை நாங்கள் தீவிர கவனத்தில் எடுத்துக்கொள்வோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குண்டுவெடிப்பு சம்பவம் சீன தொழிலாளர்களை குறி வைத்து நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் சீனா பல்வேறு முதலீடுகளை செய்துள்ளது.
இதை வளர்ச்சிக்கான திட்டம் என்று இம்ரான் கான் தலைமையிலான அரசு கூறிவருகிறது. இந்தியா-சீனா- பாகிஸ்தான் இடையே சச்சரவை ஏற்படுத்தியுள்ள பொருளாதார தாழ்வார திட்டத்தை செயல்படுத்துவதிலும் சீனா மும்முரம் காட்டிவருகிறது.
இதற்கு சில உள்ளூர் குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. இந்நிலையில் சீன தொழிலாளர்கள் சென்ற பேருந்தில் குண்டு வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஹபீஸ் சயீத் வீட்டருகே கார் குண்டுவெடிப்பு- மூவர் உயிரிழப்பு!