நேபாளத்தின் போகாரா என்ற இடத்துக்கு கேரள மாநிலத்தைச் சேர்ந்த 15 பேர் கொண்ட குழு சுற்றுலா சென்றனர். சுற்றுலாவை முடித்துக்கொண்டு திரும்பும் வழியில் தமான் மாவட்டத்திலுள்ள எவரெஸ்ட் பனோரமா ரிசார்ட்டில் இந்தக் குழு தங்கியது.
விடுதி அறையில் இருந்தவர்கள், திங்கள்கிழமை இரவு திடீரென்று மயக்கமடைந்தனர். இதனையடுத்து உடனடியாக அவர்கள் சிகிச்சைக்காக ஹேம்ஸ்( Hams) மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே எட்டு பேரும் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவத்தில் இரு தம்பதிகள் மற்றும் அவர்களின் குழந்தைகள் நான்கு பேர் என எட்டு பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து விடுதி மேலாளர் கூறுகையில், "அவர்கள் மொத்தம் நான்கு அறைகளை முன்பதிவு செய்திருந்தனர். அதில் எட்டு பேர் ஒரே அறையிலும் மற்றவர்கள் வேறு அறையிலும் தங்கியிருந்தனர். சுற்றுலா பயணிகள் தங்களை சூடாக வைத்திருக்க கேஸ் ஹீட்டரை இயக்கியுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார். சுற்றுலா பயணிகள் விஷவாயு தாக்கி உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை திறந்து வைத்த இருநாட்டு பிரதமர்கள்