ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில், பருவநிலை மாற்றத்தைத் தடுக்க அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
எக்ஸ்டிங்ஷன் ரெபெல்லியன் (Extinction Rebellion) என்ற தன்னார்வல அமைப்பு சார்பில் நடந்த இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், பதாகைகள், பேனர்களுடன் சாலையில் பேரணியாக சென்ற போராட்டக்காரர்கள், பின்னர் சாலையின் நடவே அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் சாலையை விட்டு நகருமாறு அறிவுறுத்தினர். ஆனால், அதற்கு போராட்டக்காரர்கள் மறுப்பு தெரிவித்தனர்.
இதனால், போராட்டக்காரர்களை குண்டுகட்டாக தூக்கி சாலையிலிருந்து காவல் துறையினர் அப்புறப்படுத்தினர். மேலும், 72 பேர் மீது போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தது, காவல் துறையினரை பணிசெய்யவிடாமல் தடுத்தது, அமைதியைக் கெடுத்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.