ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள தகார் பகுதியில் தலிபான் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியது. அதில் அந்நாட்டு ராணுவ வீரர்கள் 6 பேரும், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டார்.
அத்துடன் ஆறு வீரர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக களமிறங்கிய அமெரிக்க படையினர், கடந்தாண்டு அமைதி ஒப்பந்தம் மேற்கொண்டனர்.
இதையடுத்து, தலிபான் கைதிகளை விடுதலை செய்த ஆப்கானிஸ்தான் அரசு, போர் நிறுத்தத்தை பின்பற்றி வந்தது. இந்த சூழலில் கடந்த சில மாதங்களாக இரு தரப்பும் மோதத் தொடங்கியுள்ளதால் அமைதி ஒப்பந்தத்தில் இடையூறு ஏற்படும் என சர்வதேச அரசியல் நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: பைடன் பதவியேற்பு விழா: நோ சொன்ன ட்ரம்ப், யெஸ் சொன்ன மைக் பென்ஸ்