ஆப்கானிஸ்தானில் உள்ள பால்க் பிராந்தியத்தில் தலிபான் பயங்கரவாத படையினர் பயிற்சி மேற்கொள்ளும் இடத்தில் ஏற்பட்ட வெடிகுண்டு விபத்து ஏற்பட்டது. அங்கு வெடிகுண்டு தயாரிப்பது எப்படி என்று பயிற்சி அளிக்கப்படும் களத்தில் எதிர்பாராதவிதமாக ஐ.இ.டி. குண்டுகள் வெடித்தன.
இதில் 30 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். இதில் ஆப்கான் நாட்டைச் சேராத ஆறு பயங்கரவாதிகளும் அடக்கம். அங்கு அமெரிக்கா-தலிபான் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்ட பின் தலிபான்களின் செயல்பாடுகள் தலைதூக்கிவருகிறது. இதன் விளைவாக அங்கு தலிபான்களின் தாக்குதல் வெகுவாக அதிகரித்துள்ளது.
இது பிராந்திய அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கோவிட்-19 நிலவரம்: இந்தியாவில் புதிதாக 12,194 பேருக்கு பாதிப்பு