ETV Bharat / international

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்! - Injuries in Japan earthquake

டோக்கியோ: புகுஷிமா மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

earthquake
நிலநடுக்கம்
author img

By

Published : Feb 14, 2021, 3:56 PM IST

ஜப்பான் நாட்டின் புகுஷிமா மாகாணத்தில், ரிக்டர் 7.3 அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் 7.1 என நிலநடுக்கம் அளவு கணக்கிடப்பட்டிருந்த நிலையில், பின்னர் 7.3 என கணக்கிடப்பட்டது.

ஜப்பான் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்படி, இரவு 11.08 மணியளவில் புகுஷிமா அருகே பசிபிக் கடலில் 60 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டபோதும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படாதது குறிப்பிடத்தக்கது. 30க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பேசிய தலைமை அமைச்சரவை செயலாளர் கட்சுனோபு கடோ, " வலுவான நிலநடுக்கம் காரணமாக, சுமார் 950,000 வீடுகளுக்கு மின்சார வசதி பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன" எனத் தெரிவித்தார்.

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்

மேலும், நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதத்தை விரைவாக ஆராய்ந்து, மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அரசு ஊழியர்களுக்கு பிரதமர் யோஷிஹைட் சுகா வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளிக்கு அருகேதான் 2011ஆம் ஆண்டில் மிகச் சக்திவாய்ந்த நிலநடுக்கமும் ஏற்பட்டது. அப்போது, 18,000க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையும் படிங்க: ஆப்கான் குண்டுவெடிப்பில் 30 தலிபான்கள் பலி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.